செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

கூகுள் என்ன கடவுளா?

சிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கூகுளில் கிடைப்பது அனைத்தும் பரம சத்தியம்.

கூகுள் என்ன கடவுளா? எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க.. இல்லை அரிச்சந்திரனா? உண்மையை மட்டுமே பேச.. அதிலும் நம்மளைப் போன்றவர்கள் எழுதிய விசயங்கள் தான் கிடைக்கின்றன. நாம் பொய்யாக எழுதினால் அதிலேயும் பொய்கள் கிடைக்கும்.

கூகுளில் சமீபத்தில் ஒரு தவறான விசயத்தைப் பார்த்தேன். கூகுள் மேப்பில் ஆங்கிலத்தில் சில இடத்தின் பெயர்களைப் டைப் செய்து அதை அப்படியே ஏதோ ஒரு மொழிபெயர்ப்பு மென்பொருள் கொண்டு மொழிபெயர்த்து தமிழில் போட்டு இருக்கிறார்கள்.


அதிலே இருக்கும் சில தவறுகளைப் பாருங்கள்.

THANDALAM  என்பது ஆங்கிலப் பெயர். அதை தண்டலம் என்று தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் கூகுள் அதை தூண்டலாம் என்று காட்டுகிறது.

BRINDAVAN NAGAR என்பது ஆங்கிலப் பெயர். அதை பிருந்தாவன் நகர் என்று தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் கூகுள் அதை பிரிந்தவன் நகர் என்று காட்டுகிறது.

SUDHA AVENUE என்பது ஆங்கிலப் பெயர். அதை சுதா அவன்யூ என்று தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் கூகுள் அதை சுதா அவனுக்கே என்று காட்டுகிறது.இப்படித்தான் மகாபாரதம் தெரிந்த ஒரு நபரிடம் யூடியூபில் மஹாபாரதம் பற்றி பதிவர்கள் போடும் விசயங்களை கூறிப்பாருங்கள். அவர்கள் உங்களை அடிக்க வருவார்கள். அவ்வளவு தவறான விசயங்கள்.

மிக ஆழமான இலக்கிய விசயங்களை, வரலாற்று நிகழ்வுகளை கூகுளில் தேடிப்பாருங்கள். அவை கிடைக்காது. ஏனெனில் இண்டர்நெட்டில் நேரத்தை விரையமாக்குபவர்களுக்கு அவை தெரியாது. விசயம் தெரிந்தவர்கள் இண்டர்நெட்டை விரும்புவதில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு பையனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவனுடைய காதலிக்கு நன்கு ஆங்கிலம் தெரியும். அவள் இவனுக்கு என்று அனுப்பியதை ஆவேசம் என்று படித்தான். இரண்டு பேருக்கு இடையில் இந்த மாதிரி தவறுகள் இருப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் எல்லோரும் தேடுகிற, சரி என்று நம்புகிற கூகுள், விக்கிபீடியாவில் இந்த மாதிரி இருப்பதை என்னவென்று சொல்வது?

அதை மட்டுமே நம்புகிறார்களே, அவர்களை என்னவென்று சொல்வது?

5 கருத்துகள்:

 1. உண்மைதான். நல்ல பதிவு!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 2. கூகிள் translate கருவி என்பது 100 சதவிகிதம் சரியான கருவி அல்ல என்று கூகிள் நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இதில் வரும் தவறுகளை திருத்த உதவுங்கள் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளது. பெயர்களை தப்பாக மொழி பெயர்த்ததற்காக வருத்தப்படும் நீங்கள், ஒரு வாக்கியத்தை மொழிபெயர்த்து பாருங்கள்.. நொந்து விடுவீர்கள்... அவர்களின் அந்த மென்பொருளை சீர்படுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையே... தமிழ் தெரியாத ஒரு நிறுவனம் எடுக்கும் முயற்சி இப்படி தான் இருக்கும், அதை செழுமைப்படுத்த முயற்சி எடுங்கள் நண்பர்களே https://translate.google.co.in/?hl=en&authuser=0#ta/en/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு தெரியாத ஒரு விஷயத்தை கூறியதற்கு மிக்க நன்றி தனபால்.
   நான் பெயர்களை தப்பாக மொழிபெயர்த்ததற்காக வருத்தப்படவில்லை. அதை மக்கள் கடவுளைப் போல பாவிக்க கூடாது என்று கூறுகிறேன். எனது கட்டுரையின் நோக்கம் மக்களைப் பற்றியது. கூகுளைப் பற்றியது அல்ல.

   நீக்கு
 3. எல்லா விசயங்களும் கூகிளில் கிடைக்கும் என்பது தவறு தான்... ஆனால், நாம் தேடக் கூடிய விசயங்களுக்கு ஓரளவு தேவையான விவரங்களை, கோடிட்டு காட்டுவதும் கூகிள் தான்...

  பதிலளிநீக்கு
 4. கூகுள் பல நிலைகளில் கைகொடுக்கிறது என்பது உண்மை. ஆங்காங்கே இவ்வாறான விடுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது, தவிர்க்க முடியாதது.

  பதிலளிநீக்கு