திங்கள், 28 செப்டம்பர், 2015

யின் யாங் / சக்தியும் சிவனும் / பெண்மையும் ஆண்மையும்

அதிலிருந்தே அனைத்தும் தோன்றின. அனைத்து ஜீவராசிகளும், அனைத்து கொள்கைகளும், அனைத்து நாடுகளும், அந்த நாடுகளை கடந்த காலங்களும், காலங்களை கடந்த தத்துவங்களும் இன்றும் இந்த யின் யாங்காகவே உள்ளன.

யின் யாங்கில் என்றும் பிரிவினையில்லை. பேதமில்லை. சண்டையில்லை. குழப்பமில்லை. உயர்வுமில்லை, தாழ்வுமில்லை. பெரியதுமில்லை, சிறியதுமில்லை. ஏனெனில் அந்த அனைத்துமே அவைகளே. சக்தியும் சிவனுமே மொத்தமும், சக்தியில்லயேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக