ஞாயிறு, 25 அக்டோபர், 2015

வறுமையென்னும் ஆசான்

நான் பட்ட இந்த கஷ்டம் என் புள்ளைங்களுக்கு வரவே கூடாது

இந்த தலைமுறை இளைஞர்களை வளர்த்து விட்ட பெற்றோர்கள் அடிக்கடிகூறிய வார்த்தைகள் இவை. இவர்கள் கஷ்டம் என்று கூறுவதுபெரும்பாலும் குடும்பத்தில் உள்ள ஏழ்மையாக இருக்கும் அல்லதுதொழில் சார்ந்த கஷ்டங்களாக இருக்கும்.அவர்கள் ஏழ்மையை அவ்வளவுஇழிவாக கருதுகிறார்கள் . அதனால் அவர்களது குழந்தைகளை ஏழ்மைஎன்றால் என்ன ? என்று கேட்கிற அளவுக்கு ஏழ்மையின் வாசமேஇல்லாமல் வளர்ப்பார்கள் .

அந்த குழந்தைகளுக்கு பசியின் கொடுமையை பற்றி தெரியாது .ஏனென்றால் அந்த பெற்றோர் பசியில் அதிகம் வாடியதால், தனதுகுழந்தைகளுக்கு அந்த கொடுமை நேரக்கூடாது என்று சொல்லி பசிஎன்றால் என்ன ? என்று தெரியாத அளவிற்கு மூன்று வேளையும் பசிக்கும்முன்பே சாப்பாடு கொடுத்து வளர்ப்பார்கள் .

இவர்கள் பக்கத்து கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்குகால்நடையாகவே சென்று அங்குள்ள சத்துணவை சாப்பிட்டு படித்திருப்பார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை கல்விக்கட்டணம் அதிகமாக இருந்தாலும் தூரத்தில் இருக்கும் ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து ,பள்ளிக்குள்ளே சென்று இறங்கிக் கொள்ளும் படியாகபேருந்துக் கட்டணமும் கட்டிவிடுவார்கள்.

அந்த பெற்றோர் தங்கள் காலத்தில் எப்படியெல்லாம் கஷ்டபட்டார்களோ அதிலே ஒன்று கூட என்னவென்று புரியாமல் தங்கள் குழந்தைகளை வளர்ப்பார்கள். இதனால் அந்த வளரும் தலைமுறை பின்னாளில் வரும்சாதாரண சவால்களைக் கூட சந்திக்க தைரியம் இல்லாததாக வளரும்.

அரைமணி நேரம் சாப்பாடு தயார் ஆகுவதற்கு நேரமானால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் பசி அவர்களுக்கு மிகவும் புதியது .

பத்து நிமிடம் தாமதமாக பேருந்து வந்தால் கூட இவர்கள் கோபப்படுவார்கள். ஏனென்றால் இவர்களுக்கு இவர்கள் பெற்றோர் எந்தவிசயத்திலும் தாமதப்படுத்தியிருக்க மாட்டார்கள் .

இப்படியாக எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தவர்கள் நாளடைவில் சிறுசிறு கஷ்டங்களுக்கு கூட ஒடிந்து போகிறார்கள் . இதிலே இவர்கள் தவறு என்று எதுவுமில்லை . எல்லாம் பெற்றோர்களின் தவறு மட்டுமே.

ஒரு ஆலமரம் வெட்டவெளியில் வெயிலில் காய்ந்து, மலையில்நனைந்து, வரும் புயல்காற்றை எல்லாம் எதிர்கொண்டு வளர்கிறது. அதுநான் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதற்காக அதனுடைய கன்றுகளை அதன் நிழலிலேயே வைத்து வளர்த்தல் வளர்வது எப்படி இன்னொரு ஆலமரமாக இருக்கும் ? ஒரு புயலிலே ஒடிந்து போகும் முருங்கை மரம் போலல்லவா இருக்கும். இதே நிலைதான் அந்தகுழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள்அந்த அளவு கஷ்டபட்டீர்கள் , அதனால்தான் இவ்வளவு தூரம் வளர்ந்தீர்கள். ஆனால் தன குழந்தைகள் கொஞ்சம் கூடகஷ்டப்படக்கூடாது என்று நினைத்து அவர்களை வளர விடாமல் குழந்தைகளாகவே வைத்து விடுகிறீர்களே. இது சரியாகுமா?

கஷ்டங்களையும் வறுமையையும் ஏதோ சாத்தனை போல அருகேநெருங்க விடாமல் வளரும் தலைமுறை ஒரு முழு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்காது. இப்படி செய்பவர்கள் “ நான் பல்கலைகழகத்தில் படிக்க கஷ்டபட்டேன்” என்று தம் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல் இருப்பார்களா? உலக வரலாற்றில் ஏழ்மையில் வாடி வளர்ந்தவர்கள் எல்லாம், பணக்கார குழந்தைகளாக வளர்ந்தவர்களை விட அதிகம் சாதனை செய்திருக்கிறார்கள்.

செருப்பு தைப்பவரின் மகனாக பிறந்த லிங்கன் தான் அமெரிக்கஜனாதிபதியானார்.

சாப்பாட்டுக்கு கஷ்டபட்ட மார்க்ஸ் கம்யூனிச சித்தாந்தத்தைஉருவாக்கினார்.
கண்டக்டராக இருந்த சிவாஜிராவ் சூப்பர் ஸ்டாரனார்.

இவர்களுக்கு மகனாக செல்வசெழிப்பில் வளர்ந்த இவர்களது வாரிசுகள் இவர்கள் அளவு சாதிக்கவில்லை;
இவர்களுக்கு வறுமையும், கஷ்டங்களும் கற்றுக்கொடுத்த போதனைகளை இவர்களது வாரிசுகளுக்கு இவர்களால் கற்றுக்கொடுக்கமுடியாது.

“கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே நமக்குவராமல் போய்விடும்” என்பார் ஃபிடல் காஸ்ட்ரோ.

“வறுமை ஆறாவது புலன்” என்பார் எமர்சன்.

இவர்களெல்லாம் வறுமையையும், கஷ்டங்களையும் இப்படி நேர்மறை விஷ்யங்களாக கருதியதால் அல்லவா இவ்வளவு தூரம் வளர்ந்தார்கள்.வறுமையும், கஷ்டங்களும் நமக்கு வரக்கூடாது என்று நினைத்தால் நம்மால் வாழமுடியும், ஆனால் வளர முடியாது.

“வறுமை ஒரு பல்கலைகழகம், கூத்துப்பட்டறை, உலைக்களம்.”

அங்கே இருக்கும் கஷ்டங்களுக்காக நீங்கள் அங்கே போக  மறுத்தால் பின்னர் எப்படி பட்டம் பெறமுடியும், எப்படி பக்குவம் பெற முடியும்.

வறுமையும், கஷ்டங்களும் வெறுக்கப்பட வேண்டியவை அல்ல. நம்உறுதியை சோதனை செய்யும் கருவிகள். நம்மை மன உறுதியை வளர்க்கும் புரதச்சத்து. நமக்கு மட்டுமே சேர்க்கை கிடைத்த அதிஅற்புதமான பள்ளிக்கூடம். அதை எதிர் கொள்ள வேண்டும். பயந்து ஓடக்கூடாது. அப்படி செய்தால் மட்டுமே நாம் மாபெரும் வெற்றியாளனாக, மிகச் சிறந்த மனிதனாக உருவெடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக