திங்கள், 5 அக்டோபர், 2015

சகாயம் ஒரு கலெக்டர் அல்ல !

ஆங்கிலேய அரசு நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில், அவர்களுக்குத் தேவையான வரியை வசூலிப்பதற்காக மாவட்டம் தோறும் அமர்த்தப்பட்ட கைக்கூலிகள் பில் கலெக்டர்கள் எனப்பட்டார்கள்.

பின்னர் அந்த பில் கலெக்டர் என்ற பெயரே கலெக்டர் என்று ஆங்கிலேய ஆட்சியில் பயன்படுத்தப் பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் அது மாவட்ட ஆட்சியாளர் என்று தமிழில் பயன்படுத்தபடுவதைப் போல் ஆங்கிலத்தில் District Administrator என்ற வேறு சொற்கள் மூலம் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

அடிப்படையில் அன்று இருந்த பில் கலெக்டர் வேலைக்கும், என்று உள்ள மாவட்ட ஆட்சியாளர் வேலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மேலும் பில் கலெக்டராக இருப்பதற்கு உள்ள தகுதியைப் போன்று அத்தனை குறைந்ததல்ல என்றுள்ள மாவட்ட ஆட்சியாளர்களின் தகுதி.

அந்த வகையில் பார்த்தால் இன்று உள்ள எந்த IAS அதிகாரியும் கலெக்டர் என்று அழைக்கப்படுவதே மரியாதைக்குறைவான செயலாகும். மற்ற மாவட்ட ஆட்சியாளர்களுக்கே கலெக்டர் என்ற வார்த்தையை விடுத்து வேறு சரியான ஆங்கில வார்த்தையை தேட வேண்டி உள்ளது.

எனில் நியாயத்துக்காகவும், சத்தியத்துக்காகவும், அதிகாரவர்க்கத்தின் ஏமாற்று வேலைகளை வெளிக்கொணர்வதற்காகவும், நாளும் பொழுதும் உழைக்கிற ஒரு பெரிய மனிதனுக்கு கலெக்டர் என்ற அடைமொழி எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்?

வேண்டுமானால் “முன்மாதிரி மாவட்ட ஆட்சியாளர்” என்று அவர் அழைக்கப்படலாம். ஆனால் அதுவும் அவர் தகுதிக்கு குறைவானதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக