செவ்வாய், 17 நவம்பர், 2015

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடவில்லை -2

இந்த நாட்டில் நடக்கும் திருமணங்கள்பல, மிகச்சிறந்தமுறையில் மரணம் வரை செல்கின்ற பல திருமணங்கள் கொஞ்சம் கூட வெற்றியடைவதில்லை. ஆனால் இவைகளுக்கு காரணம் அதிகம் பெண்களே.

இதைப் படிக்கும் எந்த பெண்ணுக்கும் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. உணர்வு பூர்வமாகவே வாழ்ந்து அறிவு பூர்வமாக வாழ்வது எப்படி என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தெரியாத சில பெண்கள் எடுக்கும் பல முடிவுகளாலும், முட்டாள்தனமான பல செயல்களாலும் இந்த திருமணங்களும், குடும்ப நிறுவனங்களும் வெற்றியோ தோல்வியோ அடைகின்றன.

உணர்வின் இரு கோடியிலும் வாழ்ந்து பழகிவிட்ட அவளுக்கு அறிவின் தளத்தில் இருப்பது பற்றி யாரும் கற்றுத்தரவில்லை. அவளாக முன் வந்து கற்றுக் கொள்ளவும் இல்லை.

மாமியார் மருமகள் சண்டையில் தொன்னூறுசதம் அர்த்தமற்ற, முட்டாள்தனமான சண்டைகளே. அவை அனைத்தும் அந்த சண்டை போட வேண்டும் என்ற உணர்வு இருக்கும் வரை மட்டுமே. அந்த ஈகோ உணர்வு எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் அந்த மாமியார் (பெரும்பாலும் அவர்கள்தான்) தன்னை ஒரு கடவுள் என்று நினைத்து கொள்கிறார். தனது மருமகளை தனக்கு கீழே வைக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த மாமியார் தன்னுடைய மகளுக்கு நீ உன் மாமியாருக்கு கீழ்படிந்து நட என்று சொல்வதில்லை. நாளடைவில் அந்த மருமகள் மாமியாரானாலும் இதே கதைதான்.

மகள் மூலமாக வேறொரு வீட்டில் தலைமை செய்ய நினைப்பதும், மாமியாராகி தன் வீட்டில் தலைமை செய்வதும், மகனுக்கு என்ன வரதட்சணை வரும் என்று கணக்கு போடுவதும் இந்த பெண்களே. கல்யாண ஸ்தாபனத்தில் இத்தனை குறைகளிருக்க திருமணங்கள் எப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கபடும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக