வியாழன், 24 டிசம்பர், 2015

கிருஷ்ணனும் மனிதனும்

ஓரளவு படித்தவன், தான் கொஞ்சம் அறிவாளி என்ற நினைப்புள்ளவன் மஹாபாரதத்தில் வரும் கிருஷ்ணனை ஒரு காம கொடூரனாகவும், மோசமான நடத்தை உள்ளவனாகவும் மட்டுமே காண்கிறான். இது தவிர்க்க முடியாததாக உள்ளது. அது போல கிருஷ்ணனும் காம உணர்ச்சி அதிகம் கொண்டவனாகவே வாழ்ந்திருப்பான்.

இந்த உலகில் அறிவாளிகள் அதிகம் உள்ளனர். ஆனால் புத்திமான்களும், ஞானிகளும் குறைவாகவே உள்ளனர். புத்தி எந்த அளவுக்குப் பயன்படுத்த படுகிறதோ அந்த அளவுக்கு ஒருவனுக்கு காம உணர்ச்சி அதிகமாக வாய்ப்புள்ளது. கிருஷ்ணன் மகா ஞானி. அதனால் தான் அவன் காம உணர்வு அதிகம் கொண்டவனாக வாழ்ந்தான். காமத்தில் முழுமையாக வாழ்ந்தான். காம உணர்வே சிறிதும் இல்லாமல் இறந்தான். ஆனால் சாதாரண மனிதனுக்கு காமத்தைப் பற்றி பேசவும் பயம், அதில் முழுமையாக ஈடுபடவும் பயம். இவன் காமத்தில் முழுமையாக வாழ்வதுமில்லை. காமத்திலிருந்து முழுமையாக விடுபடுவதுமில்லை.

யூதர்கள் காம உணர்வு அதிகம் கொண்டவனாக வாழ்கின்றனர். மகா புத்திசாலியாகவும் இருக்கிறார்கள். இன்று வரையில் நோபல் பரிசுகளை அதிகம் வாங்கி குவித்தது அவர்கள்தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு யூதர். கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர். யேசு கிறிஸ்து, முகமது நபி என இன்னும் ஏராளமான யூதர்கள் மகா புத்திமான்கள். காமமும் அதிகம் கொண்டவர்கள். யூதர்கள் செய்துகொள்ளும் சுன்னத் சடங்கு காம உணர்வு மற்றும் புத்திசாலித்தனம் இவை இரண்டின் முடிச்சுகளையும் மூளையில் தூண்டுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒரு அறிவாளி தனது புத்தியை சரியாகப் பயன்படுத்துவதில்லை. மிக குறைவாகவே அவன் புத்தியை பயன்படுத்துகிறான். அந்த அறிவாளி கொஞ்சம் கோழையும் கூட. உண்மையான ஞானத்தை தேடப்பயந்த கோழை. அவன் புத்திக்கும், அறிவுக்கும் வித்தியாசம் தெரியாத அஞ்ஞானி.

கிருஷ்ணன் போன்ற ஒரு மனிதனை குறை சொல்பவனுக்கு அவன் அளவுக்கு ஞானியாகவும் இருக்க தெரியாது, அவன் அளவுக்கு காம உணர்ச்சியோடும் இருக்க முடியாது. அவன் சக்தியற்றவன். கிருஷ்ணனை கொண்டாடும் மனிதர்கள் எங்கு குறைவாக உள்ளார்களோ அங்கு அறிவாளிகள் அதிகமாகவும், புத்திசாலிகள் குறைவாகவும் இருப்பார்கள். ஆனால் கிருஷ்ணனை கொண்டாடுவதாலேயே ஒரு மனிதன் புத்திசாலி என கருதிவிட முடியாது. அவன் வேறு காரணத்திற்காகவும் கிருஷ்ணனை கொண்டாடலாம்.

கிருஷ்ணன் 16000 மனைவியரை மணந்தான் என்று கூறி ஒரு இந்துவை மதமாற்றத்திற்கு உட்படுத்தும் கிறித்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஏன் 16000 பேரை மணந்தான் என்று அவர்களுக்கு தெரியாது. அல்லது அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அவர்களைப் பொருத்த வரையில் கிருஷ்ணனைக் குறை சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது.

கிருஷ்ணன் 16000 பேரோடு உடலுறவு கொள்வதற்காகத்தான் அத்தனை பேரை மணந்தான் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கலாம். ஒரு வேளை அப்படியிருந்தால், கல்யாணம் என்பதே உடலுறவுக்காகத்தான் என்பது அவர்களது ஆழ்மனதில் உள்ள எண்ணமாகும். இது அவர்களுக்கே தெரியாது. பாவம் அவர்கள் மனைவி.

கிருஷ்ணன் மகா ஞானி. துணிச்சலுள்ளவன். வஞ்சகத்தில் சிறந்தவன். அழகன். தர்மத்தின் பக்கம் நிற்பவன். நன்றி மறவாதவன். நட்பை மறவாதவன். மரணத்திற்கும் அஞ்சாதவன். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவன். எதனோடும் பந்தப்படாதவன். பெரும் பாவங்கள் செய்யும் சக்திமிக்கவன். அதைக் கொண்டு பெரும் நற்காரியங்களை ஆற்றுபவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக