திங்கள், 18 ஜனவரி, 2016

தேவையான வரலாறு-3 (அசோகர்)

மௌரிய சாம்ராஜ்யத்தை முதன் முதலில் சந்திர குப்த மௌரியர் நிறுவினார். பின் அதை இந்தியா முழுவதுக்குமான பேரரசாக உருவாக்கியவர் அசோகர் ஆவார்.

அரியணைப்போட்டியில் உடன் பிறந்த 99 சகோதரர்களையும் வெட்டிக்கொலை செய்து அரியணை ஏறியவர் அசோகர். பின் இந்திய பேரரசை நிறுவிய பின் கலிங்கப் படையெடுப்பை நிகழ்த்தினார். தன் மொத்தப் படையையும் கொண்டு கலிங்க நாட்டை முழுவதுமாக சூறையாடினான். ஒரு லட்சம் வீரர்களை கொலை செய்தான். ஆனால் ரத்த வெள்ளத்தை பார்த்த அவன் போரையே வெறுத்து விட்டான். அஹிம்சை வழியை பின்பற்றத் துவங்கி விட்டான். புத்தமதத்தையும் தழுவி விட்டான்.

உலக வரலாற்றிலேயே அசோகரைப் போன்று அரியணைக்காக 99 சகோதரர்களை வெட்டியவன் எவனுமில்லை. பெரும் சக்ரவர்த்தி ஆன பிறகு தனக்கு எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் எப்போதும் இருக்கும் என்னும் தருவாயில் அஹிம்சை வழியை பின்பற்றியவனும் எவனுமில்லை. ஆனால் இவையிரண்டையும் அசோகர் செய்தார்.

புலிவாலைப் பிடித்து விட்டபின் அதை விடவும் முடியாது. தொடர்ந்து பிடித்திருக்கவும் முடியாது. அது போலவே பதவிகளும், அரச வாழ்க்கையும். ஆனால் புலியை பிடித்து அடக்கி பின் அதை விட்டுவிட்டு அதனிடமே அஹிம்சையை போதித்தவன் அசோக மன்னன்.

பள்ளியில் சொல்லித்தரப்படும் வரலாற்றில் முகமது கோரி, முகமது கஜினி, கட்டபொம்மன், ராஜராஜ சோழன் வரலாறுகள் இருக்கும் அளவுக்கு அசோகரின் வரலாறு இல்லை.

உலக அளவில் அதிக அளவில் சிலைகள் வைக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்றவர்களில் முதலாமவர் யேசு கிறிஸ்து இரண்டாமவர் மகாத்மா காந்தி. உலகம் அஹிம்சைக்கு அளித்த அங்கீகாரத்திற்கு இவை சான்றுகள்.

அசோகரின் வரலாறு உலகத்திற்கு சரியாக எட்டாததால் தான் இரண்டாவது இடத்தை காந்தி பிடித்தார். இல்லையெனில் அஹிம்சையை போதித்த மனிதர்களில் காந்தியை விட சிறந்தவராக அசோகர் இருந்திருப்பார். இன்றும் இந்த காந்தி தேசத்தில் தர்மச்சக்கரமே தேசிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தை சேர்ந்த அசோகர் புத்த மதத்தை தழுவிய பின்பும் இந்து மதக் கோவில்களையோ, பக்திச் சின்னங்களையோ அவமானப்படுத்தவில்லை. ஆனால் அவையனைத்தையும் முகலாய, ஆப்கானிய மன்னர்களும், பிற்பாடு வந்த ஆங்கிலேயர்களும் செய்தனர்.

அசோகர் ஆட்சியில் வேட்டையாடுவதையும், புலால் உண்பதையும் கைவிட்டார். மக்களிடையே பக்தி, நட்புறவை வளர்க்க தர்மாதிகாரிகளை நியமித்தார். உற்பத்தி துறைக்கு ஊக்கமளித்தார்.

99 சகோதரர்களையும், மொத்த கலிங்க நாட்டையும் அழித்து நரகத்தின் அருகாமையில் சென்ற அசோகர், புத்த மதத்தை தழுவி அதை உலகெலாம் பரப்பி தழைத்தோங்க செய்து சொர்க்கத்தை நோக்கியும் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக