சனி, 7 மே, 2016

பொருளகராதி–2 (அன்பு)

அன்பே கடவுள். அன்பிற்கு கண் இல்லை. என்பன அன்பைப் பற்றி இருக்கும் பொன்மொழிகள். ஆனால் உண்மையில் மோகத்தையே மனிதன் அன்பென்று புரிந்து வைத்திருக்கிறான். அன்பிற்கும் மோகத்திற்கும் இருக்கும் வேறுபாடு இவனுக்குப் புரிவதில்லை.

ஏசு, புத்தர் போன்றவர்களின் அன்பு மிக உயர்ந்த வகையானது. அவர்கள் வேறு அன்பு வேறு இல்லை. அவர்கள் அன்பாகவே மாறிவிட்டவர்கள். தன்னுடைய தாயைக் நேசிப்பதுபோலவே, ஒரு விபச்சாரியையும், தன்மீது கல்லெறிபவர்களையும், தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் நேசிக்க ஏசுநாதரால் மட்டுமே முடியும். தன் மீது காறி உமிழ்ந்தவனையும் மரியாதையோடு நடத்த புத்தரால் மட்டுமே முடியும்.

நீ அன்பு செலுத்தினால் நானும் அன்பு செலுத்துவேன். இல்லையெனில் நானும் அன்பு செலுத்தமாட்டேன் என்பது மனிதர்களின் அன்பு. ஆகையால் தான் தான் காதலித்த நபர் தன்னைக் காதலிக்க வில்லை என்று தெரிந்த்தும் அமிலம் வீசத்தோன்றுகிறது. கல்யாணம் செய்து வாழ்ந்த மனைவிக்கும் சிறு சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்க தோன்றுகிறது. அல்லது மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என்று மிரட்டத் தோன்றுகிறது. மனிதர்களின் அன்பு உண்மையில் வியாபாரமாகவே இருக்கிறது.

அன்பு மயமான மனிதர்களின் அன்பு அனைவர் மீதும் மழை போல் பொழிகிறது. சதாரண மனிதர்களின் அன்பு ஒரு குறிப்பிட்ட மனிதர்களைப் பொறுத்தோ அல்லது குறிப்பிட்ட உறவுமுறையைப் பொறுத்தோ அமைகிறது. தாய் தன்னுடைய குழந்தைகளிடம் அன்பு காட்டுவது போல் அடுத்தவர் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதில்லை. அவளுடைய அன்பு உயர்நத்துதான் என்றாலும் அதுவும் குறிப்பிட்ட உறவு முறையைச் சார்ந்தே இருக்கிறது.

மேற்கண்ட பத்தியில் அன்பு என்ற வார்த்தையை விடுத்து காதல் என்று இருந்திருந்தால் வாசிப்பவனுக்கு அது பிடிக்காமல் போகலாம். ஏனெனில் இங்கே அன்பு நல்ல வார்த்தை, காதல் கெட்ட வார்த்தை. செய்யக்கூடாத விசயம். காதல் இங்கே காமத்திற்கு இணையாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு ஆண் மற்றொரு பெண்ணிடத்தில் கொள்ளும் அன்பு, உடல் கவர்ச்சி, மனக்கவர்ச்சி, காம்ம், பரிதாபம், அல்லது வேறு ஏதோ ஒன்று இங்கே காதல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில் அது அன்பாகவும் இருக்கலாம் அல்லது மோகமாகவும் இருக்கலாம். அதைப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் அவசியமே ஒழிய காட்டுமிராண்டித்தனமாக பிரிப்பது, கொலை செய்வது போன்றவை அவசியமற்றது. வெறுக்க வேண்டியது.

“முன்பு இவன் என் நண்பன். ஆனால் இப்போது இல்லை” என்று கூறக் கேள்விப்பட்டு இருக்கலாம். நண்பர்கள் பெரும்பாலும் விரோதிகளாவது ஏதாவது ஒரு துரோகச் செயலால் அல்லது அன்பு வியாபாரமாகிப் போவதால். நான் அவனுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் அவன் எனக்கு இதைக்கூட செய்யவில்லை என்று ஒருவர் எண்ணும்போது பிரிவு ஏற்படுகிறது.

“அன்பிற்கு கண் இல்லை” என்று காதலர்கள் விசயத்தில் கூறுகிறார்க்ள். ஆனால் உண்மையில் அன்பிற்கு மட்டுமே ஒளி பொருந்திய கண்கள் உண்டு. கண் இல்லாத எதுவும் அன்பாக முடியாது. அது மோகம், அஹங்காரம், முட்டாள்தனம்.

மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்ளும் போது அப்ன்பு உலகத்தில் பெருகுகிறது. ஆனால் மனிதன் சக மனிதனைத் தவிர மற்ற விசயங்களான உடல் கவர்ச்சி, ஜாதி, மதம், சமூக அந்தஸ்து, கௌரவம், தற்பெருமை, முட்டாள்தனம் போன்றவற்றின் மீதும், வீடு, கார், நிலம், சொத்து போன்றவற்றின் மீதும் நேசம் கொள்ளும் போது அன்பு அழியத்துவங்குகிறது. வன்முறையும், காட்டுமிராண்டித் தனமும் பெருகுகிறது.

“என் காரை மனைவியை விட அதிகம் நேசிக்கிறேன்” என்பதும், “என் வீட்டையும், குடும்பத்தையும் விட நான் சமூக அந்தஸ்தையும், பதவியையும் நேசிக்கிறேன்” என்பதும் எத்தனை வடிகட்டிய முட்டாள்தனம். அறிவை இழந்து, மனதளவில் பாதிக்கப்பட்ட அரசியல் வாதிகள் மட்டுமே அவ்வாறு செய்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக