சனி, 14 மே, 2016

சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்

“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது”

இவ்வாறு கிருஷ்ணன் கீதையில் கூறுவதாகவும், எனவே வர்ண வேறுபாடு மற்றும் சாதி வேறுபாடுகளுக்குக் காரணம் கடவுள்தான் என்றும், பகுத்தறிவாளர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் ஆதியில் நான்கு வர்ணங்களை கொண்ட பாகுபாடு குணத்தையும், மனிதனது செயல்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை வசதியாக மறந்து விட்டனர்.

மேலும் நான்கு வர்ணங்களை படைத்தேன் என்றுதான் கடவுள் கூறினாரே ஒழிய சமூகத்தில் இவர்கள் உயர்ந்தவர், இவர்கள் தாழ்ந்தவர் என்று எதுவும் கூறவில்லை.

ஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என்பது தனது சுயநலத்திற்காக மனிதனே உருவாக்கிக் கொண்ட பாகுபாடு. அதற்கு அவன் கடவுளைப் பயன்படுத்திக் கொண்டான்.

அதுபோலவே பகுத்தறிவாளர்களும் கூறப்பட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தானே ஒரு அர்த்தம் கற்பித்து பழியை கடவுள் மேல் போட்டுவிட்டனர்.

பாவம் கடவுள்.

“நிறத்துக்கும், குணத்துக்கும் ஏற்ப ரோஜாவையும், எருக்கம்பூவையும் நானே படைத்தேன்” என்று கடவுள் கூறியிருந்தால் கூட நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று ரோஜா எருக்கம்பூவிடம் கூறியிருக்காது.

ரோஜாவுக்கு ஒரு அழகு இருப்பதுபோல எருக்கம்பூவுக்கு ஒரு அழகு இருக்கிறது. எதுவும் உயர்ந்ததுமில்லை. எதுவும் தாழ்ந்ததுமில்லை. எல்லாமும் சமமுமில்லை. ஒவ்வொன்றும் அதற்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

மனிதர்களில் வேறுபாடு இயற்கையில் உள்ளது. ஆனால் அந்த வேறுபாடுகள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.

பிறப்பால் பிராமணரான பரசுராமரும், துரோணரும் செய்கையால் சத்ரியரானார்கள்.

பிறப்பால் சூத்திரனான விஷ்வாமித்ரர் செய்கையால் பிராமணரானார்.

பிறப்பால் வைசியரான காமராஜர் செய்கையால் சத்ரியரானார்.

பிறப்பால் பிராமணரான ராஜாஜி செய்கையால் சத்ரியரானர்.

சமூகத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதை உடைத்து வெளியே வருவதற்கு மனிதன் சக்தியற்றவனல்ல. தாம் என்ன வகை மனிதன் என்பதை ஒவ்வொரு மனிதனும் தானே முயற்சி செய்து கண்டறிய வேண்டும்.

5 கருத்துகள்:

 1. எத்தனை எத்தனை வேறுபாடுகளை கற்பித்து வைத்திருக்கிறார்கள் ... நம் முன்னோர் நல்லது எவ்வளவு செய்து இருக்கிறார்களோ அதே அளவு தீமையும் செய்துவைத்து இருக்கிறார்கள் ...

  பதிலளிநீக்கு
 2. எதற்காக இந்த சாதி பெயர்கள் தேவைன்னு சத்து சொல்லுங்கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காய்கறி கடைக்குப் போனால் கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், புடலங்காய் என்று பல காய்கறிகள். ஒன்றைப் போல ஒன்று இல்லை. எல்லாம் வெவ்வேறானவை. அது போல ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வகையானவன். அப்படி வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு வெவ்வேறு வகையான வேலைகளையும் வாழ்க்கை முறையையும் உறுதிப்படுத்துவதற்காக உருவானதுதான் சாதி முறை.

   நீக்கு
  2. ஆனால் ஒன்று நிச்சயம் இப்படி வகைப்படுத்துவதால் ஒன்றை விட ஒன்று குறைச்சல் என்றோ, மேம்பட்டது என்றோ அர்த்தமில்லை. கத்தரிக்காயை விட புடலங்காய் குறைச்சலுமில்லை, மேம்பட்டதுமில்லை. சமமுமில்லை. இரண்டும் வேறுவேறானவை.

   நீக்கு
  3. சாதிமுறை தவறல்ல. அதிலே மேல் கீழ் பார்த்ததுதான் தவறாகிவிட்டது. மேலும் இந்த சாதிமுறையும் வர்ணாசிரமமும் பிறப்பை ஒட்டி உருவாக்கப்படக்கூடாது. குணத்தை ஒட்டி உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் கிருஷ்ணர். அந்த வகையில் இப்போதிருக்கும் இந்து தர்மம் கிருஷ்ணரின் கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டது.

   நீக்கு