புதன், 27 ஜூலை, 2016

முடவனும் குருடனும்

காட்டினூடே இருக்கும் ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவன் குருடு. இன்னொருவன் கால் முடவன். இருவரும் தொழிலைப் பொறுத்தவரையில் பயங்கர போட்டியாளர்கள். இவன் பாதையில் அவன் நடக்கமாட்டன். அவன் வரும்போது இவன் விலகிச் சென்றுவிடுவான்.

ஒரு நாள் காட்டில் தீப்பிடித்து, கிராமத்திலும் பெருகி, அதை அணைக்கமுடியாமல் கிராமத்து மக்கள் அனைவரும் வெளியேறினர். இவர்கள் இருவரையும் கண்டுகொள்ள எவருக்குமே நேரமில்லை.

அப்போது அந்த கால்முடவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதாவது, கால்முடவனை கண் தெரியாதவன் தனது தோளின் மீது ஏற்றிக்கொண்டு நடக்க வேண்டும். மேலே இருக்கும் முடவன் தனது கண்களைக் கொண்டு காட்டை விட்டுச்செல்ல வழிகாட்டுவான்.

அதன்படியே இருவரும் தப்பிச் சென்றனர்.

கண் தெரிந்த கால் முடவன் – இதயம்

குருடன் ஆனால் நடக்கத்தெரிந்தவன் – அறிவு

இதயம் வழிகாட்ட, அறிவு செயல்பட வேண்டும். எப்போதும் இதயமே மேலே இருக்க வேண்டும். உடலில் வேண்டுமானால் இதயம் கீழே இருக்கலாம். ஆனால் வாழ்வில் அப்படி அல்ல.

இதயத்தின் கைகளில் அறிவு புத்திசாலித்தனமாகிறது. அது ஒரு உருமாற்றம். முழுமையான சக்தி உருமாற்றம். பிறகு அந்த மனிதன் அறிவாளியாவதில்லை. ஞானியாகிறான்.

ஞானம் அறிவும் இதயமும் சந்தித்துக் கொள்வதன் வாயிலாகவே நடக்கிறது. எப்படி உன்னுடைய இதயத்துடிப்பையும் அறிவின் செயல்பாடுகளையும் ஒத்திசைவாக்குவது என்ற கலையை அறிந்துகொண்டால், உன்னைடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் மொத்த ரகசியமும் உனக்கு கிடைத்துவிட்டது என்று பொருள்.

நன்றி: இந்தக்கதையும் அதன் மூலக்கருத்தும் ஓஷோவிடமிருந்து பெறப்பட்டு சிறிது மட்டும் மாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக