திங்கள், 10 ஏப்ரல், 2017

ஒரு சிறந்த மருத்துவ முறை


இன்று பல நாடுகளில் அலோபதி மருத்துவம்தான் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த மருத்துவ முறையில் மருத்துவர்கள் நோயைப் பற்றி அக்கறை கொள்கின்றனர். ஆனால் நோயாளியைப் பற்றி அத்தனை அக்கறை கொள்வதில்லை.

மருத்துவர்களைப் பொறுத்தவரை வைத்தியம் செய்வதற்கு காசு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் நோய் குணமாகாமல் போகவும் வாய்ப்புள்ளது.

பணக்காரர்களுக்கு வியாதி வந்தால் எளிதில் குணமாவதில்லை. ஏழைகளுக்கு வியாதி பெரும்பாலும் விரைவில் குணமாகிவிடுகிறது. ஏனெனில் ஏழையால் மருத்துவர்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை.
 
ஒட்டுமொத்தமாக மருத்துவர்களைக் குறை சொல்கிறேனே என்று நினைக்கவேண்டாம். இந்த மருத்துவ முறை அப்படித்தான் இருக்கிறது.

ஒரு சிந்தனையாளன் சொன்னான். “நாம் வாழும் சமூகத்தில் கல்வி அறிவை அழிக்கிறது, மருத்துவம் உடல்நலத்தைக் கெடுக்கிறது, மேலும் நீதித்துறை நியாயத்தைக் கொல்கிறது” என்று.

அது முற்றிலும் உண்மை.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விசயம்

ஒரு மலையாளி மயக்கமாக இருக்கிறது. நிற்க முடியவில்லை என்று மருத்துவமனை வந்து சேர்ந்தார். அவருக்கு பெரிய பிரச்சனைகள் எதுவுமில்லை.

மருத்துவர்களும் ஊசி, மருந்து, குளுக்கோஸ் என்று எதை எதையோ எழுதி ஒரு ஏழாயிரம் ரூபாய்க்கு பில் போட்டுவிட்டார்கள்.

கண் விழித்துப் பார்த்த நோயாளிக்கு அதிர்ச்சி. 

பில்லைப் பார்த்ததால் அல்ல. அந்தப் பில்லில் குதிகால் வலிக்குக் கூட மாத்திரை எழுதியிருந்திருக்கிறான் அந்த புண்ணியவான் டாக்டர். (நோயாளியும் ஒரு மருத்துவர்).

இம்மாதிரி ஏமாற்றுவேலைகள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு திட்டத்தை சீனாவில் நடைமுறைப்படுத்தியிருந்தார் கன்பூசியஸ்.

அவருடைய திட்டத்தின்படி மக்கள் அனைவரின் உடல்நலத்தை பாதுகாப்பதே மருத்துவர்களின் வேலை. மருத்துவர்கள் வைத்தியம் செய்வதற்கு காசு வாங்க மாட்டார்கள். ஆனால் அனைவருக்கும் அரசு சம்பளம் கொடுத்துவிடும்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் உடல்நலம் சரியாக இருக்க அந்தந்தப் பகுதி மருத்துவர்களே பொறுப்பு. மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பளக்குறைப்பு, இடைநீக்கம், பணிநீக்கம் தான் கிடைக்கும்.

அதே நேரம் ஒவ்வொரு மனிதனும் நோய் வந்தாலும் வராவிட்டாலும் தன்னுடைய உடல் நலத்தை அரசு கவனித்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்த வேண்டும். கிட்டதட்ட ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போல.

இவ்வாறான சூழலில் மருத்துவர்கள் கல்லா கட்டுவதில் குறியாக இருக்க மாட்டார்கள். மக்களின் நலத்தைக் காப்பதிலேயே குறியாக இருப்பர். இம்முறை சீனாவில் நடைமுறையில் இருந்த காலத்தில் சீனா மிக ஆரோக்கியமான நாடாக இருந்துள்ளது.

இம்முறை மருத்துவர், நோயாளி என்று இருவருக்குமே சாதகமாக இருந்துள்ளது. மருத்துவர்களும் அந்நாட்களில் மருந்துகளை விடுத்து, உடற்பயிற்சி, நீச்சல், சரியான உணவுமுறை போன்ற விசயங்களையே சிபாரிசு செய்திருக்கிறார்கள்.

எவ்வளவு புத்திசாலி மனிதர் பாருங்கள் இந்தக் கன்பூசியஸ்.

3 கருத்துகள்:

 1. மருத்துவம் என்பது வணிகமாகிவிட்டது ஐயா
  மருத்துவர் என்பவர் புனிதராகப் பார்க்கப் பட்ட காலம் மாறிவிட்டது,
  மருத்துவம் ஒரு தொழிலாகிவிட்டது
  நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 2. மருத்துவத்தை முழுவதும் கற்றவர் மிகக் குறைவே... அனைத்து மருத்துவர்களும் காசே குறியாக இருப்பதாக சொல்லி விட முடியாது, எத்தனையோ நல்ல மருத்துவர்களால் தான் இந்த உலகில் நோய்கள் குணமாகி கொண்டு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இருக்கலாம். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு. குறை நம்முடைய மருத்துவ முறையில் இருக்கிறது.

   நீக்கு