திங்கள், 29 மே, 2017

டேட்டா - ஒரு சாபம்

கடந்த திமுக ஆட்சியில் தொலைக்காட்சி இலவசமாகத் தரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது ஒரு பெரியவர் கூறினார், “அது உங்களுக்குத் தரப்படும் பரிசு அல்ல. அது ஒரு வியாபாரம். இலவசமாக தொலைக்காட்சியை கொடுத்தபின் தான் வைத்திருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலமாக இலவசமாக கொடுத்த பொருளுக்கான தொகையை மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆனால் மக்கள் நிரந்தரமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி தன்னை மறந்து விடுவார்கள்.”

அது இன்று உண்மையாகி விட்டது. மக்கள் தொலைக்காட்சிக்கு தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர்.

இன்று இண்டர்னெட் டேட்டா மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. அது ஒரு வரப்பிரசாதம் என்று எண்ண வேண்டாம். இது ஒரு சாபம்.

இன்றைக்கு ஏற்கனவே நிறைய பேர் ஆண்டிராய்டு பைத்தியங்களாகி விட்டனர். செல்போன் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. குடிகாரர்களை விட மோசமாக அடிமையாகிவிட்டனர். இதில் குடிகாரர்கள் தேவலம்.

எல்லோரும் பயன்படுத்துவதால், எல்லோரும் தன்னைப் போலவே அடிமையாக இருப்பதால் ஒன்றும் பிரச்சனை இல்லை எண்ண வேண்டாம். ஆண்டிராய்டு போனுக்கு அடிமையாவதும் ஒரு பிரச்சனைதான்.

இப்போது அந்தப் பிரச்சனைக்கு வீரியத்தைக் கூட்டி விட்டது. இந்த குறைந்த விலையில் கிடைக்கும் டேட்டா. ஒரு நாளைக்கு கிடைக்கும் ஒரு ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட வேண்டும் என்று முக்கிய வேலைகளை ஒதுக்கி இண்டர்னெட் பார்க்கும் முட்டாள்தனமான வேலையை இன்று நிறைய பேர் செய்கிறார்கள்.

மேலும் பயன்படுத்துவது ஒன்றும் உருப்படியான வேலையில்லை. ஃபேஸ்புக், வாட்ஸப் பயன்படுத்துவது. அதிலேயும் ஒன்றும் இல்லை.

முந்தைய நாட்களில், தெருமுனையில் குட்டிசுவற்றில் இருந்து பேசுபவர்களை வெட்டிப்பயல் என்று கூறுவார்களே, அம்மாதிரி குட்டிசுவரில் பேசுவதைத்தான் பேஸ்புக்கிலும் பேசுகிறார்கள்.

இதை விட்டால் ஏதாவது ஒரு விளையாட்டு, யூடியுப் வீடியோக்கள், சினிமா செய்திகள். எல்லாமே குப்பை.

கொஞ்சம் பேர் நம்மை பொல ப்ளாக் படிப்பது. ப்ளாக்குகளும் கொஞ்சம் தான் உருப்படி. நிறைய குப்பைதான்.

இந்த மீடியாக்கள் இருக்கிறதே அவர்கள் இன்னும் மோசம். விபச்சாரி அளவுக்கு இறங்கி விட்டார்கள். அவர்களுக்கு டிஆர்பி வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதுகிறார்கள்.

இந்த நிலை தொடரும்போது குடிகாரர்களுக்கு மறுவாழ்வு மையம் வைப்பது போல, செல்போன் அடிமைகளுக்கும் மறுவாழ்வு மையம் துவங்க வேண்டும் எனும் நிலை உருவாகும்.

12 கருத்துகள்:

 1. உண்மைதான் நண்பரே
  அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சே

  பதிலளிநீக்கு
 2. எல்லாம் ஒரு எல்லை வரை தான், எப்படி ஊடகங்கள் என்றோ விலை போய் விட்டது மக்களுக்கு புரிந்து விட்டதோ, அதே போல் சமூக வலை தளங்களும் விலை போய் விட்டதை மக்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொல்வது உண்மை தான்.. ஆனால்,டெக்னாலஜியை நல்ல முறையில் உபயோகப்படுத்தினால் அது வரமே! அதை பயன் படுத்துவோர் கையில் தான் இருக்கிறது சாபமும் வரமும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை நிறைய பேர் சாபமாகத்தான் மாற்றி வைத்திருக்கிறார்கள்.

   நீக்கு
 4. இதைத் தவிர்ப்பது எளிதாக இல்லையே இப்போதிருக்கும் சூழ்நிலையில்

  பதிலளிநீக்கு
 5. முற்றிலும் உண்மையே, இருந்தாலும் தவிர்க்கமுடியாத அளவிற்கு ஆக்கிவிட்டார்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே அதுதான். "மக்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் அவர்களை அதிகாரம் செய்ய முடியாது" என்பதுதான் அவர்களின் கொள்கை.

   நீக்கு
 6. இவை தவிர்க்க முடியாத தீமைகள். அரசுக்கு டாஸமாக் எப்படியோ மக்களுக்கு டேட்டா பேக்.(Data pack). இன்னும் கூட, குடிக்காதவர்கள் இருக்கிறார்கள்தானே! - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை இராய செல்லப்பா, "இன்னும் கூட குடிக்காதவர்கள் இருக்கிறார்கள்தானே" என்று நீங்கள் நேர்மறையாக பார்க்கிறீர்கள். நான் அவர்கள் நிறைய இல்லையே என்று வருந்துகிறேன். இது டேட்டா பேக் பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும்.

   நீக்கு
 7. தேவைக்கு தகுந்தபடி உபயோகிக்க பழகிக் கொள்ள வேண்டும்....
  பயனுள்ள இடுகை...

  பதிலளிநீக்கு
 8. கண்டிப்பா.....அப்படித்தான் ஆகப்போகிறது.

  பதிலளிநீக்கு