புதன், 30 ஆகஸ்ட், 2017

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.

மேலும் பள்ளியிலிருந்து கற்ற கல்வி அனுபவ வாழ்விற்கு உதவாது என்று சொல்லவும், லஞ்சம் வாங்க கூடாது, பொய் சொல்லக் கூடாது என்று பள்ளியிலிருந்து ஒருவன் கற்ற விசயங்களை அவன் விட்டு விட சொல்லி கேலி செய்யவும், வாத்தியார்களை மட்டம் தட்டவும் இதை சொல்வார்கள்.

மாணவன் ஒருவன் கேட்கிறான்.

“டீச்சர், அதான் கணக்குப் போடுவதற்கு கால்குலேட்டர் வந்து விட்டதே. பிறகு ஏன் இன்னமும் எங்களுக்கு அபாகஸ் பற்றி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?”

ஆனால் கால்குலேட்டர் இயங்கும் விதத்தைப் பற்றி அறிந்துகொள்ள, பிற்காலத்தில் அவனே ஒரு நவீன கால்குலேட்டரை உருவாக்க முதலில் அபாகஸிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியாது.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுதான். ஆனால் ஏட்டிலே சுரைக்காயைப் பற்றி படிக்காதவனிடம் உண்மையான சுரைக்காயைக் காட்டி இது என்னவென்று கேட்டால், அது சுரைக்காய் என்று சொல்ல அவனுக்குத் தெரியாது.

எனக்குத் தெரிந்தவரை இப்போது பெரும்பாலான பள்ளிகளில் பதினோராம் வகுப்புப் பாடத்தை நடத்துவதே இல்லை. நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டும் நடத்துகிறார்கள். ஒருவேளை நடத்தினாலும் அதிலே சில விசயங்களை விட்டு விடுகிறார்கள்.

அரிச்சுவடி பதினோராம் வகுப்பிலல்லவா இருக்கிறது. அதை விட்டு விட்டால் பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் எப்படி அவனுக்குப் புரியும்?.


நமது மக்களும் சரி, மாணவர்களும் சரி சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் படிப்பவன்தான் புத்திசாலி என்று ஒரு தவறான கருத்தை கொண்டுள்ளனர்.

சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் முழுமையும் பகுப்பாய்வு, கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கே அறிவியல் கூற்றுகளுக்கும், விளக்கங்களுக்கும் முக்கியத்துவமில்லை.

நமது மாநிலப் பாடத்திட்டத்தில் அறிவியல் கூற்றுகளுக்கும், விளக்கங்களுக்கும் தரப்படும் முக்கியம் கணக்கீடுகளுக்குத் தரப்படவில்லை. இரண்டு முறையிலுமே ஒரு பகுதியில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவனுக்கு சி.பி.எஸ்.ஈ வினாத்தாளையும், சி.பி.எஸ்.ஈ யில் படித்தவனுக்கு மாநிலப் பாடத்திட்ட வினாத்தாளையும் கொடுத்து எழுதச் சொன்னால் இருவருமே பெயிலாகி விடுவார்கள்.

5 கருத்துகள்:

 1. எனது சந்தேகம் தீர்ந்ததுங்க!
  மரியாதைக்குரிய ஐயா,
  வணக்கம். நமது மக்களும் சரி, மாணவர்களும் சரி சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் படிப்பவன்தான் புத்திசாலி என்று ஒரு தவறான கருத்தை கொண்டுள்ளனர்.
  சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் முழுமையும் பகுப்பாய்வு, கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கே அறிவியல் கூற்றுகளுக்கும், விளக்கங்களுக்கும் முக்கியத்துவமில்லை.

  நமது மாநிலப் பாடத்திட்டத்தில் அறிவியல் கூற்றுகளுக்கும், விளக்கங்களுக்கும் தரப்படும் முக்கியம் கணக்கீடுகளுக்குத் தரப்படவில்லை. இரண்டு முறையிலுமே ஒரு பகுதியில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

  மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவனுக்கு சி.பி.எஸ்.ஈ வினாத்தாளையும், சி.பி.எஸ்.ஈ யில் படித்தவனுக்கு மாநிலப் பாடத்திட்ட வினாத்தாளையும் கொடுத்து எழுதச் சொன்னால் இருவருமே பெயிலாகி விடுவார்கள். என்ற விளக்கத்தை பதிவிட்டு எனது ஐயத்தைப் போக்கியமைக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது அய்யா.

   இந்த நீட் தேர்வு இன்று அனிதாவைக் கொன்று விட்டது. அத்தனை மார்க் எடுத்த பெண்ணால் ஏன் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்று கேட்கிறார்கள்.

   வேண்டுமானால் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் .சி.பி.எஸ்.ஈ. மாணவர்களை மாநில பாடத்திட்ட வினாத்தாளை எழுதச் சொல்லுங்கள். விளக்கம் புரிந்துவிடும் என்று நான் சொல்கிறேன்.

   நீக்கு